நயன்தாராவை பாணியை கடைபிடிக்கப் போகும் தமன்னா : எந்த மேட்டர்ல தெரியுமா?
‘பாகுபலி’யின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்த எல்லோரும் சினிமாவில் பிஸியாகி விட்டார்கள்.
ஆனால் தமன்னாவுக்கு மட்டும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பட வாய்ப்புகள் அமையவில்லை. என்றாலும் கைவசம் சில படங்களை வைத்திருக்கும் அவர் நயன்தாரா பாணியில் செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்.
சமீபகாலமாக நாம் மேலே சொன்ன நான்கு நடிகைகளும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள். அதனால் படங்களும் ஹிட்டாகி அவர்களுடைய மார்க்கெட் எந்த சேதாரமும் இல்லாமல் ஸ்டெடியாக போய்க்கொண்டிருக்கிறது.
இதுநாள் வரை பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த தமன்னாவுக்கும் இவர்களைப் போலவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது என திடீரென்று ஆசை வந்துள்ளது. நல்லவேலையாக அவரது இந்த ஆசை வீண்போகவில்லை.
குணால் கோஹ்லி இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தமன்னா. கதை முழுவதையும் தமன்னா தன் தோள் மீது தாங்க வேண்டி உள்ளதாம். அந்தளவுக்கு கதாநாயகிக்கு தோதான கதையாம்.
படம் வந்தால் தான் தெரியும்? இந்த மாதிரி கதைகளுக்கு தமன்னா தோதா என்று?