”லேட்டா வந்தாலும் கரெக்ட்டா குறி பார்த்து அடிக்கணும்..!” – ரசிகர்களை உசுப்பி விட்ட ரஜினி

Get real time updates directly on you device, subscribe now.

ஜினியின் கட்சி அறிவிப்பு எப்போது? என்பது தான் அவருடைய ரசிகர்களின் பல மாத எதிர்பார்ப்பு.

90 சதவீத வேலைகள் முடிந்து விட்டது விரைவில் அறிவிப்பு வரும் என்று அது குறித்து கடந்த சில வாரங்களாக சொல்லிக்கொண்டிருந்த ரஜினி ‘2 பாயிண்ட் ஓ’ ட்ரெய்லர் விழாவிலும் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாகப் பேசி அரங்கத்தை அதிர வைத்தார்.

இந்தியாவின் பெருமையாக சுமார் 550 கோடி ரூபாய் செலவில் லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘2 பாயிண்ட் ஓ’ படத்தை பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஷங்கர் இயக்கியிருக்கிறார். அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று அக்டோபர் 4-ம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

‘3டி’ படமாக தயாராகியிருக்கும் இப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும் ‘4டி’ என்ற புதிய சவுண்ட் சிஸ்டம் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் அனுபவத்தை புதிதாக இருக்கும்.

Related Posts
1 of 69

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ரஜினி படத்தைப் பற்றி அதிகம் பேசினாலும் அரசியலைப் பற்றியும் லைட்டாக தொட்டுவிட்டுச் சென்றார். அப்போது அவர் பேசியதாவது, “2 .0 படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.

ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம் என்றார்.

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜட்டில் துவங்கியது. கடைசியில் 550 கோடியில் வந்து நின்றது. கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் ஈட்டும். லேட்டா வர்றது முக்கியமில்லை, லேட் ஆனாலும் கரெக்டா குறி வெச்சு அடிக்கணும்.

வந்தாச்சு வெற்றி உறுதியாகி விட்டது. மக்கள் ஹிட் ஆக்குவதுதான் பாக்கி என்று பேசவும் உற்சாகமடைந்த ரசிகர் கூட்டம் கைதட்டல், விசில் சத்தம் என்று ஆராவாரம் செய்தார்கள். அதைப் புரிந்து கொண்டு சிரித்த ரஜினி ”நான் படத்தை சொன்னேன், படத்தை சொன்னேன்” என தனக்கே உரிய பாணியில் கூறினார்.