”சூர்யா மனசு பூ மாதிரி…” : புகழ்ந்து தள்ளும் நித்யா மேனன்

மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக நித்யா மேனன் அந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகும் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தார்.
ஆனால் இப்போது மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். தற்போது சூர்யாவுடன் ‘24’, ரோகிணி இயக்கும் ‘அப்பாவின் மீசை’, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சுதீப் ஜோடியாக ‘முடிஞ்சா இவன புடி’, விக்ரம் ஜோடியாக ‘இருமுகன்’படங்களில் நடிக்கிறார்.
இதில் சூர்யாவுடன் 24 படத்தில் நடித்த போது படப்பிடிப்பில் சூர்யாவையே மிரள வைத்து விட்டாராம் நித்யா.
படத்தில் நித்யாவின் நடிப்பு சூர்யாவை வெகுவாக கவர அவரை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். சூர்யாவின் அந்த மனம் திறந்த பாராட்டைக் கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட நித்யா சூர்யாவோட மனசு பூ மாதிரி.., மனசுல என்ன இருக்கோ அதை அப்படியே நேருக்கு நேர் சொல்றார் என்று பதிலுக்கு சூர்யாவை புகழ்ந்து தள்ளுகிறார்.