தோஷம் நீங்க ரகசிய பூஜை! : சுதீப்பை திருமணம் செய்கிறாரா நித்யாமேனன்?
‘அப்பாவின் மீசை’, ’24’, ‘இருமுகன்’, ‘முடிஞ்சா இவன புடி’ என கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார் நித்யாமேனன்.
இப்படி நித்யாவின் சினிமா கேரியருக்கு எந்த குறைச்சலும் இல்லை என்றாலும் சமீபத்தில் ரகசியமாக பூஜை ஒன்றை நடத்தியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்பெல்லாம் படப்பிடிப்பு விட்டால் வீடு, வீடு விட்டால் படப்பிடிப்பு என்றிருந்தவர் இப்போது நேரம் கிடைத்தால் கோவில், குளம் என்று சுற்றி வர ஆரம்பித்திருக்கிறாரா,
ஏன் நித்யாமேனன் இப்படி திடீரென்று மாறி விட்டார் என்று அவரது சகாக்களே ஆச்சரியப்படுகிறார்கள். இதைப்பற்றி யார் கேட்டாலும் ஒரு சின்ன புன்னகையோடு அவர்களை கடந்து விடுகிறார்.
ஆனால் அதன் பின்னணியை நெருங்கிப் போனால் வரும் உண்மை வேறு விதமாக வருகிறது.
‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் கன்னட நடிகர் சுதீப்புடன் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கிசுகிசுக்கப்பட்டது. சுதீப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இருவருமே அந்த காதல் சமாச்சாரத்தை மீடியாக்கள் முன்பு மறுத்து வந்த நிலையில், சுதீப்பை ரகசியமாக திருமணம் செய்வதற்காகத்தான் நித்யாமேனன் ரகசியமாக இந்த தோஷ நிவர்த்தி பூஜை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்…
இப்படித்தான் சமந்தாவும், சித்தார்த்தும் காதலித்த போது இருவரும் ஒன்றாகச் சென்று திருப்பதி கோவிலில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார்கள். இருவருமே விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று அந்த காதல் ஜோடி பிரிந்து விட்டது.
இப்போது அதே பாணியில் நித்யாமேனன் பூஜை வழிபாடு செய்திருப்பதும் அப்படி ஒரு நிகழ்ச்சிக்காகத்தானோ? என்கிற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டிருக்கிறது.
எது எப்படியோ நல்லது நடந்தால் சரி…!