ராணா – டாப்ஸி நெருக்கம்! : தடதடக்கும் தெலுங்கு திரையுலகம்

Get real time updates directly on you device, subscribe now.

raana

ரு படத்தில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் மாஸ் ஹீரோவை புகழ்ந்து தள்ளுவதில் நடிகைகளை மிஞ்சுவதில் யாருமில்லை.

அப்போது தானே அடுத்தடுத்த படங்களில் தன்னையே சிபாரிசு செய்வார் என்கிற கணக்கும் அதில் அடங்கியிருக்கிறது.

ஆனால் சில நடிகைகள் சில ஹீரோக்களை படப்பிடிப்பில் மட்டுமில்லாமல் பொது வெளியிலும் பாராட்ட ஆரம்பித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களின் பாராட்டுகளை கொஞ்சம் உற்று நோக்கினால் அவர்களுடையே ஓடும் கெமிஸ்ட்ரி அப்ப்பட்டமாக தெரிந்து விடும்.

தமிழில் ‘காஞ்சனா 2’ படம் ஹிட்டான பிறகும் டாப்ஸிக்கு எதிர்பார்த்தபடி பெரிய ஹீரோக்களின் படங்கள் தமிழிலும் அமையவில்லை, தெலுங்கிலும் அமையவில்லை.

இதனால் தேடி வந்த ‘காஸி’ ஹிந்திப்பட வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இப்படத்தின் ஹீரோ ராணாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்திருக்கிறாராம் டாப்ஸி.

படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் பொது இடங்களிலும், பார்ட்டிகளிலும் ராணாவுடன் சுற்றி பொழுதை போக்குகிறாராம். இந்த தகவல் தெலுங்கு திரையுலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.