‘சர்கார்’ விஜய்யாக மாறி ஓட்டு போட்ட நெல்லை வாக்காளர்!
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மாபெரும் வெற்றியையும், வசூல் சாதனையும் படைத்த படம் ‘சர்கார்’.
இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால் , 49 P தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தற்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றறொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 P தேத்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று விஜய் ரசிகர்கள் பெருமையோடு பகிர்ந்து வருகிறார்கள்.