டீன்ஸ்- விமர்சனம்

சின்னப் புள்ளைகளுக்காக படமெடுக்கலாம். ஆனால் சின்னப்புள்ளத் தனமாக படம் எடுக்கலாமா?
டீன்ஸின் கதை ரொம்பவே எளிமையானது. தன் பெற்றோர்களுக்கு பாடம் எடுக்க நினைக்கும் பிள்ளைகள் சிலர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் ஒரு பயணத்திட்டம் போடுகிறார்கள்..ஒருநாள் பள்ளியை கட் அடித்துவிட்டுப் பயணிக்கவும் செய்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது சிறுவர்களில் ஒருவர் பின் ஒருவர் காணாமல் போகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதே பின்னல் நிறைந்த திரைக்கதை
71 வயதான விஞ்ஞானி போன்ற வேடத்தில் பார்த்திபன் படத்தில் முழுதாக வரவில்லை என்றாலும் வரும் காட்சிகளில் கவரவே செய்கிறார். சிறுவர்களில் ஒருசிலர் எதார்த்தமாக நடித்துள்ளனர். ஒருசிலர் மிகை நடிப்பைக் கொட்டியுள்ளனர். யோகிபாபு பிஸ்னெஸ் நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளார் போல. கதையில் அவர் கேரக்டர் ஒட்டவில்லை
இமானின் இசையில் ஆக்கமோ தாக்கமோ எதுவுமில்லை. பாடல்களும் சரிவர கை கூடவில்லை. ஒளிப்பதிவு சுமாரும் சூப்பருமில்லாத கேட்டகிரியில் இருக்கிறது. மற்ற எல்லா டெக்னிக்கல் டீமும் வெறுமனே கடமைக்கு வேலை செய்துள்ளனர்
எந்தக் கதையை எடுத்தாலும் அக்கதையில் பல இடங்களில் தனது முத்திரையைப் பதிப்பார் பார்த்திபன். ஆனால் இந்தப் படத்தில் அப்படியான முத்திரைகள் இல்லை. இது பார்த்திபன் ஆடியன்ஸுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். படத்தில் ரசிகனை குழப்பும் காட்சிகள் நிறைய உள்ளன. தெளிவற்ற திரையெழுத்தே இதன் காரனம். இன்னும் திரைக்கதையில் நல்ல மெனக்கெடல் செய்திருந்தால் டீன்ஸ் நம்மை பாசிட்டிவாக டீல் செய்திருக்கும்.
2.5/5