ரஜினி, கமல், விஷால் மூவருக்கும் வாழ்த்துகள்! – சூர்யா பரபரப்பு பேச்சு

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்டூடியோ கீரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் தயாராகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ( டிசம்பர் 4-ம் தேதி) நடைபெற்றது.

இதில் சூர்யா, தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் நடிகர் சூர்யா பேசியபோது, ”அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேற வேண்டும். நமது துறையிலிருந்து அடுத்த பயணத்தை துவங்க இருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்க வேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு. விக்னேஷ் சிவன் சொன்னது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும் முக்கியமோ அதில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். இதேபோல ஒரு 35, 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

Related Posts
1 of 38

ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர். ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார். எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது.

விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ண வேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது. முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது.

உடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அணைத்து பாடல் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card எங்கள் படத்தில் வராது அப்படி ஒரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா.