“தலைவி” மாபெரும் வெளியீடு!
கங்கானா ரனாவத் நடிப்பில் பன்மொழி திரைப்படமாக அனைத்திந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் “தலைவி” திரைப்படம் 2021 செப்டம்பர் 10 முதல், தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு K.V.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். Vibri Motion pictures, சார்பில் விஷ்ணு வர்தன் இந்தூரி தயாரித்துள்ளார், சைலேஷ் R சிங், திருமால் ரெட்டி மற்றும் ஹிதேஷ் தக்கர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். கிரியேட்டிவ் புரடியூசர் பிருந்தா பணியாற்றியுள்ளார். மதன் கார்கி வசனம் எழுதியுள்ளார். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.