கார்த்தியின் விருமன் படப்பிடிப்பு துவங்கியது!

Get real time updates directly on you device, subscribe now.

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், கார்த்தி – இயக்குனர் முத்தையா மீண்டும் இணையும் “விருமன்” படத்தின் பூஜை நடைபெற்றது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது.

Related Posts
1 of 15

மேலும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். சூரியா அறிமுகப்படுத்த, கார்த்தியின் ஜோடியாகும் இந்த செய்தி திரையுலகிலும், மக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“விருமன்” என்று தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பூஜை இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது.