‘உறியடி’ இயக்குனரை மீண்டும் ஹீரோவாக்கிய சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

2டி நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர்!

’36 வயதினிலே’, ‘பசங்க-2′, ’24’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் வரை சமூக நோக்கிலான படங்களை தனது 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா.

அந்த வரிசையில் அவருடைய 2டி நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார்.

‘உறியடி’ படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Related Posts
1 of 33

மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூர சுந்தர பாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார்.

உறியடி படத்தை தொடர்ந்து இந்தப் படத்திலும் நாயகனாக விஜய்குமார் நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார்.. ‘மெட்ராஸ் சென்ட்ரல்’ சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ‘உறியடி’யில் கவனம் ஈர்த்த ஷங்கர் தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்துவரும் ’96’ படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக புரமோஷன் பெற்றுள்ளார்.

சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜூடன் அதே சமயம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.