‘தளபதி 64’ – விஜய் சேதுபதி தான் வில்லனாமே?
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். வரும் 2020 கோடை கொண்டாட்டமாக இப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதோடு இது எந்த மாதிரியான படமாக இருக்கும்? என்று ரசிகர்கள் ஆவலோடு இருக்க, முழுக்க ஆக்ஷன் ப்ளஸ் காமெடிப் படமாக இருக்குமென்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கூடுதல் தகவலாக தற்போது இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் இணையப் போகிறார் என்கிறார்கள். ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ‘தளபதி 64’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப் போகிறாராம். இதற்காக விஜய் சேதுபதியிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கால்ஷூட் இருக்கிற பட்சத்தில் கண்டிப்பாக நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.