தண்டேல்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

காதலும் வாழ்வியலுமாய் பயணிக்கும் தண்டேல்

ஹீரோ நாக சைதன்யா ஒரு மீனவர். மீனவ மக்கள் வசிக்கும் பகுதியில் வாழும் அவருக்கும் சாய் பல்லவிக்கும் நெடுங்கால காதல் உண்டு. இந்நிலையில் குஜராத் அரபிக்கடலில் மீன் பிடிப்பிற்காக நாக சைதன்யா செல்கிறார். சாய் பல்லவிக்கு அதில் விருப்பமில்லை. 22 குடும்பங்களுக்காக மீன்பிடிக்கச் செல்லும் நாக சைதன்யா ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். இங்கு சாய் பல்லவிக்கு கருணாகரனோடு நிச்சயதார்த்தம் நடந்துவிடுகிறது. நாக சைதன்யா எப்படி மீண்டு வந்தார்? அவருக்கும் சாய் பல்லவிக்குமான காதலின் முடிவு என்ன? என்பதே தண்டலின் கதை

நடிகராக நாக சைதன்யா அசூரப்பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். காதல், ஆக்‌ஷன், எமோஷ்னல் என எல்லா உணர்வும் அவருக்கு இப்படத்தில் கூடி வந்திருக்கிறது. சாய் பல்லவி தனது அமரத்துவ நடிப்பை இப்படத்திலும் wonderful- ஆக வெளிப்படுத்தியுள்ளார். கருணாகரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் நன்றாக நடித்துள்ளனர்

தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசையில் நல்ல உழைப்பைப் போட்டுள்ளார். பாடல்கள் பேக்ரவுண்ட் ஸ்கோர் இரண்டுமே ஆசம். ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் சிறப்பான ப்ரேமிங்ஸ் வைத்துள்ளார். எல்லா அழகியலையும் அவரின் கேமரா உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளது

இப்படத்தின் கதையை 2019-ஆன்டு நடந்த உண்மைச் சம்பவத்தையொட்டி எழுதியுள்ளார் ரைட்டர் கார்த்திக் தீடா. உணர்வுகளை சரியாகத் தொகுத்து, அழகழகான காட்சிகளை குவித்துள்ளார் இயக்குநர் சந்து மொண்டேட்டி

இன்னும் பின்பாதியை அழகுப்படுத்தியிருக்கலாம். இஸ்லாமிய வெறுப்பு சின்னதாக திரையில் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம். மற்றபடி தண்டேல் ok watch movie என்பதில் மாற்றமில்லை
3/5