விஜய்யின் அரசியல் எண்ட்ரி! – முதல் ஆளாக வரவேற்ற கமல்!

Get real time updates directly on you device, subscribe now.

’’மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி முதற்கட்டப் பணிகளை துரிதப்படுத்தியிருக்கும் கமல்ஹாசன், நேற்று முன்தினம், ட்விட்டரில் #AskKamalhaasan என்ற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது ”உங்களின் தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா?” என்கிற கேள்வியை முன் வைத்தார் ஒரு ரசிகர்.

அதற்கு பதிலளித்த கமல் ”எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்” என்றார்.

Related Posts
1 of 102

ரஜினி, கமல் ரசிகர்களைப் போல நடிகர் விஜய்யின் ரசிகர்களும் அவருடைய அரசியல் எண்ட்ரியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற நிலையில் கமலும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று பொது வெளியில் முதல் ஆளாக கருத்து கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

இதற்கிடையே தன்னை அரசியலுக்கு வரச்சொல்லி கருத்து தெரிவித்த கமலுக்கு போனில் குறுஞ்செய்தி அனுப்பி நன்றி தெரிவித்தாராம் விஜய்.