10 கோடியை தாண்டிய வசூல்! : நம்பியவர்களை கோடீஸ்வரன் ஆக்கிய ‘பிச்சைக்காரன்’

Get real time updates directly on you device, subscribe now.

VIJAY-ANTONY

செண்டிமெண்ட்டில் ஊறிப்போன தமிழ்சினிமாவினரை மூக்கில் விரலை வைக்கிற அளவுக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீசான ‘பிச்சைக்காரன்’.

”எங்களோட முதல் ரிலீஸ் இந்த பிச்சைக்காரன் தான். இந்தப் படத்தோட பேரை வெளியில சொன்னாலே என்னங்க ‘பிச்சைக்காரன்’னு பேர் கொண்ட படத்தை முதல் படமா ரிலீஸ் பண்றீங்கன்னு எல்லோரும் கேலி செஞ்சாங்க… ஆனா நாங்க விஜய் ஆண்டனி சார் மேல நம்பிக்கை வெச்சு படத்தை ரிலீஸ் பண்ணினோம்.

இந்தப்படம் ஓடலேன்னா எங்களுக்கு சினிமாவுல அடுத்த என்னங்கிறதே கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். நம்பிக்கையோடு ரிலீஸ் பண்ணினோம். இன்னைக்கு ஜெயிச்சிட்டோம் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்கிறார் இப்படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன்.

Related Posts
1 of 13

டைட்டில் செண்டிமெண்ட்டுகளை தகர்த்தெறிந்து வெற்றிப் படமாகியிருக்கும் இந்த ‘பிச்சைக்காரன்’ படம் 10 நாட்களில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸ் நிலவரத்தில் முன்னணியில் இருக்கிறது.

அதோடு விஜய் ஆண்டனி நடித்து இதுவரை ரிலீசான ‘நான், சலீம்’ ஆகிய படங்களில் வசூலை விட ‘பிச்சைக்காரன்’ வசூல் அதிகமாம்.

‘பிச்சைக்காரன்’ படம் ஹிட்டானதையடுத்து அடுத்தடுத்த படங்களுக்கும் ‘சைத்தான், எமன்’ எதிர்வினை வார்த்தைகளையே டைட்டிலாக வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

அதிலும் அடிச்சு நொறுக்குங்க ப்ரோ…