“சமந்தா என் தம்பி மாதிரி” ; ‘தெறி’க்க விட்ட அட்லி..!

Get real time updates directly on you device, subscribe now.

அட்லி டைரக்சனில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. எப்போது அளந்தாற்போல பேசும் விஜய் இந்த விழாவில் செல்பி புள்ள, குல்பி புள்ள, குட்டிக்கதைன்னு இறங்கி ஆச்சர்யப்படுத்தினார் என்றால் நான்ஸ்டாப்பாக 15 நிமிடம் தடையில்லாமல் பேசி அசத்திவிட்டார் இயக்குனர் அட்லி.

Related Posts
1 of 19

அதிலும் குறிப்பாக படத்தின் கதாநாயகி சமந்தா பற்றி அட்லி சொல்லும்போது அவரை. “சமந்தா என் தம்பின்னு சொல்லுவேன். அவ்ளோ ஃப்ரெண்ட் எனக்கு. ராஜாராணி நயன்தாரா எப்படியோ அப்படி சமந்தாவுக்கு இந்த மித்ரா ரோல்” என் கூறினார். சமந்தாவை தங்கை என சொல்லாமல் தம்பி என அட்லி குறிப்பிட்டது ஆச்சர்யம் தான்..