சென்னை- செங்கல்பட்டு 15 கோடி! : செமையா சூடு பிடித்த ‘தெறி’ வியாபாரம்

Get real time updates directly on you device, subscribe now.

vijay1

ஏப்ரல் 14-ம் தேதி ரிலீசுக்கு தயாராகியிருக்கும் விஜய்யின் ‘தெறி’ படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

முன்னதாக ‘தெறி’ படத்தின் டீஸர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் உலகம் முழுக்க இருக்கின்ற ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சாதனை படைத்தது.

Related Posts
1 of 79

குறிப்பாக ‘தெறி’ படத்தின் ட்ரெய்லர் இதுவரை எந்தவொரு தென்னிந்திய படமும் செய்திராத சாதனையை யு-ட்யூப்பில் செய்திருக்கிறது.

இதனாலேயே ‘தெறி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. இந்த அதிகப்படியான எதிர்பார்ப்பு தான் வியாபார சூடு பிடிக்கக் காரணம் என்கிறார்கள்.

தேர்தல் வருவதால் அது முடியவும் தான் ‘தெறி’ ரிலீசாகும் என்று முன்பு சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அந்த தகவலை முழுமையாக மறுத்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கண்டிப்பாக வரும் ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டு அன்று படம் ரிலீசாகும் என்று தெரிவித்தார்.

அது உறுதியாகி உள்ள நிலையில் படத்தின் வியாபாரமும் செமையாக சூடு பிடித்து நடந்து வருகிறது.

இதோ ஏரியா வாரியாக அவுட்-ரேட் முறையில் நடந்த வியாபாரம் :

சென்னை – செங்கல்பட்டு 15 கோடி
வட ஆற்காடு 3.25 கோடி
தென் ஆற்காடு : 3.25 கோடி
கோவை : 8 கோடி
சேலம் : 4.60 கோடி
திருச்சி : 5.60 கோடி
மதுரை : 6.90 கோடி
திருநெல்வேலி : 3.25 கோடி

இது போக வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலும் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.