தக் லைஃப்- விமர்சனம்

கமல் மற்றும் மணிரத்னம் ரைட்டிங்கில் முழுக்க முழுக்க ஏமாற்றம் அளித்த தக் லைஃப்
காயல்பட்டணத்துக் காரரான கமல் டில்லியில் ஒரு தாதா. அவரின் கும்பலுக்கும் போலீஸுக்கும் இடையே நடக்கும் சண்டையில் ஒரு சிறுவனின் தந்தை இறந்துவிடுகிறார். அதன்பின் அந்தச் சிறுவனை கமல் வளர்த்து ஆளாக்குகிறார். சிறுவன் சிம்புவாக வளர, அதன்பின் கமலுக்கும் சிம்புவிற்குமே பகை வளர, பங்காளிச் சண்டையில் யார் வென்றார்கள் என்பதே கதை
கமலின் வயதோதிகம் அவரது குரலில் நன்றாக தெரிகிறது. அதனாலே அவரது உணர்ச்சி மிகுந்த நடிப்பில் கொஞ்சம் செயற்கைத் தனம் தெரிகிறது. சிம்பு சின்னச் சின்ன இடங்களில் தூள் கிளப்புகிறார். திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவரது கேரக்டர் ஆர்க் பல்லிளிக்கிறது. அபிராமி கிடைத்த கேப்-ல் ஸ்கோர் செய்கிறார். . நாசர், அசோக்செல்வன், சேத்தன் எல்லாம் வந்து போகிறார்கள் அவ்வளவே!
ரவி கே சந்திரன் தான் இந்தப்படத்தின் மெயின் ஹீரோ. மனிதர் பின்னியெடுத்துள்ளார். ஒளிப்பதிவிற்கு இப்படத்தைப் பாடமாக வைக்குமளவிற்கு ப்ரேமிங்ஸ் எல்லாம் செம்ம! டி.ஏ கலர் கிரேடிங் சூப்பர். பின்னணி இசையில் பெரியபாய் பெரிதாக சோபிக்கவில்லை. படம் நெடுக வரும், அஞ்சு வண்ணப் பூவே என்ற பாடல் ஆறுதல் அளிக்கிறது
ஒவ்வொரு கேரக்டருக்குமான ரைட்டிங்கில் படம் வெகுஜனத்தை விட்டு விலகி நிற்கிறது. மேலும் துளியும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை ரொம்பவே சோதிக்கிறது. சமூகத்திற்கு இரண்டு நாயகர்கள் மூலம் ஏதேனும் ஒரு அறத்தைக் கற்றுக்கொடுத்திருக்கலாம். இரு நாயகர்களும் படத்தில் ஒரு நல்லதையும் செய்யக் காணோம். முடிவில் படமும் ரசிகனுக்கு நல்லதுச் செய்யவில்லை
தக் லைஃப்- பேட் வைப்
2.5/5