படமாகிறது ஆந்திராவில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவம்!

Get real time updates directly on you device, subscribe now.

thookku-mara-pookkal

ந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘தூக்குமர பூக்கள்’ என்ற படத்தை ஜெயவிஜய சாமுண்டீஸ்வரி புரொடக்‌ஷன் மற்றும் ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

பரபரப்பான இப்படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை, வசனம் எழுத கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படத்தை எடுக்கிறோம் என்றார்கள் இயக்குனர்கள்.

பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சுனில் சேவியர் இசையமைக்கிறார்.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படும் என்றார்கள் இயக்குனர்கள்.