த்ரிஷா – வருண்மணியன் பிரிவுக்கு யார் காரணம்?
பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் என்றும், அவரையே த்ரிஷா வெகுவிரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும் 1 வருடத்துக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அதற்கு ஆதாரமாக அவர்கள் இருவரும் பல சினிமா விழாக்களிலும், நைட் பார்ட்டிகளிலும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
பின்னர் ஒருநாள் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் அவர்கள் நட்பில் விரிசல் ஏற்பட்டது.
இருவருமே அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்த சமயத்தில் தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல தயாரிப்பாளரும், கட்டுமான அதிபருமான வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிச்சயதார்த்தத்தை ஒட்டி த்ரிஷாவுக்கு விலை உயர்ந்த வைர மோதிரம் உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆரம்பர பொருட்களை பரிசளித்தார் வருண்மணியன்.
இந்த ஆண்டு இறுதிக்குள் த்ரிஷா – வருண்மணியன் திருமணம் நடந்து விடும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க கடந்த சில தினங்களாகவே இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் நிரந்தரமாக பிரிந்து விட்டதாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது.
இதுபற்றி இருவரிடமும் விளக்கம் கேட்க பல நிருபர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் இருவர் தரப்பிலும் எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில் த்ரிஷா – வருண்மணியன் திருமணம் நிச்சயித்த கையோடு நின்று போனதற்கு திருமணத்துக்குப் பிறகும் த்ரிஷா படங்களில் நடிக்க அடம்பிடித்தது தான் முக்கிய காரணம் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பது பிடிக்காததால் சினிமாவுக்கு முழுக்கு போடும்படி வருண்மணியன் குடும்பத்தார் த்ரிஷாவுக்கு உத்தரவு போட்டார்களாம்.
ஆனால் த்ரிஷா அவர்கள் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்ததாலேயே வருண்மணியன் த்ரிஷாவை பிரிய நேரிட்டது என்கிறார்கள்.
ஆக த்ரிஷா – வருண்மணியன் பிரிவுக்கு த்ரிஷாவின் பிடிவாதமே முக்கிய காரணம் என்று சொல்கிறார்கள். இதில் எது உண்மை? என்பதை இருவரில் யாராவது ஒரு வாய் திறந்து சொன்னால் தான் தமிழ்கூறும் நல்லுலகம் நிம்மதியடையும்.