டூரிஸ்ட் பேமிலி- விமர்சனம்

நிறைய பாசிட்டிவ் பார்வையோடு வந்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி பார்வையாளர்களை வசியப்படுத்தியுள்ளதா?
ஒரு அகதி போல வல்வெட்டித்துறை விட்டு தமிழ்நாடு வந்திறங்குகிறது சசிகுமார் குடும்பம். இவர்களின் வருகைக்கு காரணம் வேலை இல்லாச்சூழலும், கொடும் வறுமையும் தான். நிலைமை இப்படியிருக்க ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்பில் இந்தக் குடும்பத்திற்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகிக்கிறது காவல்துறை. இதிலிருந்து சசிகுமார் தன் குடும்பத்தை எப்படி கரை சேர்க்கிறார் என்பதாக திரைக்கதை விரிகிறது
கதையின் நாயகனாக சசிகுமார் பெரும் சிரத்தை எடுத்து கவனம் ஈர்க்க முயல்கிறார். சிம்ரன் தன் நடிப்பில் குறை வைக்கவில்லை. யோகிபாபு சிரிக்க வைக்க முயற்சி எடுத்துள்ளார். கமலேஷ் ஜெகன் தான் படத்தின் கலகலப்பிற்கு பெரும் உத்திரவாதம் தருகிறார். அவரின் அச்சு அசலான ஒன்லைனர்கள் அனைத்தும் தரம். எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்பட மற்றும் பலர் சிறப்பாக நடித்துள்ளனர்
படத்தில் டெக்னிக்கல் டீமின் ஒத்துழைப்பும் தரமாக அமைந்துள்ளது. இசை அமைப்பாளர் கதையின் போக்கை உணர்ந்து இசைத்துள்ளார். படத்தில் எந்த வண்ணமும் துருத்தாத வகையில் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார் ஒளிப்பதிவாளர்
புனிதம் போற்றும் படங்களை விட மனிதம் பேசும் படங்கள் தான் இன்றைய தேவை. அதற்கான அம்சத்தோடு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர். சிற்சில செயற்கை எமோஷ்னலை தவிர்த்திருக்கலாம். துல்லியயமான திரைக்கதையால் இந்த வீக் End-ல் ஹிட் மெட்டிரியல் ஆகியுள்ளது இந்த டூரிஸ்ட் பேமிலி
3/5