எல்லாப் புகழும் ராஜமெளலிக்கே..! : சங்கடத்தில் ஷங்கர்
இனி ‘பிரம்மாண்டம்’ என்றாலே ராஜமெளலியின் பெயரைத் தான் உச்சரிப்பார்கள் போலிருக்கிறது.
அந்தளவுக்கு அவருடைய இயக்கத்தில் ரிலீசான ‘பாகுபலி’ ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பட்ஜெட்டைப் போலவே பிரம்மாண்டமான வரவேற்பையும் பெற்று விட்டது.
கோடிகளில் எடுக்கப்படுகின்ற படங்கள் வெற்றிபெறுவதில் சந்தோஷப்பட்டாலும், ராஜமெளலிக்கு கிடைத்த இந்த திடீர் அங்கீகாரம் இயக்குநர் ஷங்கருக்கு பெரும் மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கிறதாம்.
‘பாகுபலி’க்கு முன்பு வரை பிரம்மாண்டம் என்றாலே ஷங்கரின் பெயரைத்தான் உச்சரித்து வந்தார்கள் ரசிகர்கள்.
எப்போது ‘பாகுபலி’ ரிலீசானதே அப்போதே தனது பிரம்மாண்டத்துக்கு இழுக்கு வந்து விட்டதாக கருதுகிறாராம் ஷங்கர்.
இந்த மனக்குறையைப் போக்க தனது அடுத்த படத்தை ‘பாகுபலி’யை விட மிகப்பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள ஷங்கர் சிஜி, கிராபிக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட காட்சிகளை படத்தில் அதிகமாக்கிக் காட்டி தனக்கான இடத்தை தக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
எப்படியெல்லாம் கெளம்பி வர்றாய்ங்க…?