கருடன்- விமர்சனம்
சூரியின் அடுத்த அதிரடி ஆட்டம் இந்த கருடன்
உடன் பிறவா அண்ணனான உன்னி முகுந்தன் மீது கொள்ளை விசுவாசம் கொண்டவர் சூரி. அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. உன்னி முகுந்தனின் உற்ற நண்பனாக சசிகுமார் வருகிறார். கோம்பை அம்மன் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் சசிகுமார் உன்னிமுகுந்தன் கூட்டணிக்குள் ஒரு விரிசலை உண்டாக்கும் அரசியலைச் செய்கிறார் அமைச்சரான ஆர்.வி உதயகுமார். அந்த விரிசலில் நாயகன் சூரி யார் பக்கம் நிற்கிறார்? கடைசியில் ஜெயித்தது விசுவாசமா? நியாயமா? என்பதே படத்தின் கதை
சூரியின் கதாநாயக ஆட்டத்தின் இரண்டாவது வெற்றி இந்தக் கருடன் எனலாம். மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். எமோஷ்னல் காட்சிகளில் அசத்துவது அவருக்கு எளிது தான். இப்படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் பின்னியெடுத்துள்ளார். சசிகுமார் மிகச்சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். உன்னி முகுந்தன் நல்ல நடிப்பை வழங்க, ஷிவதா இரண்டு காட்சிகளில் எல்லோரையும் ஓவர்டேக் செய்துவிடுகிறார். மைம்கோபி, ஆர்.வி உதயகுமார் ஆகியோர் சிறப்பாக பங்காற்றியுள்ளனர்
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்தில் தனிப்பதிவாக ஜொலிக்கிறது. ஒவ்வொரு ஷாட்களும் மனதுக்கு நெருக்கமாக அமைந்துள்ளது. யுவனின் இசை சில இடங்களில் அதிகமாக இருந்தாலும் படத்தின் ஜீவனை கெடுக்கவில்லை. மகேஷ் மேத்யூவின் சண்டைக்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது
மிகவும் பழைய கதை தான். ஆனால் அதை தனது திறமையான திரைக்கதையாலும் நேர்த்தியான மேக்கிங்காலும் என்கேஜிங்காக வைத்துள்ளார் இயக்குநர் துரை செந்தில்குமார். இந்த வாரத்தில் நிச்சயமாக உங்களை எண்டெர்டெயின் பண்ணும் படமாக வந்துள்ளது இந்தக் கருடன்
3.5/5