சர்வதேசத் திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற ‘வேம்பு’ !

Get real time updates directly on you device, subscribe now.

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’.அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷ் நடித்த தங்கமகன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த A. குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், அதோ முகம், GV.பிரகாஷ் நடித்த ரபேல் படத்திற்கு இசை அமைத்த மணிகண்டன் முரளி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார், மிருதன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த KJ . வெங்கட்ரமணன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார், துணிவு, வலிமை போன்ற முன்னணி படங்களில் பணிபுரிந்த ராம்ஜி சோமா இப்படத்திற்கு ஒலிக்கலவை செய்துள்ளார் .

பெண் தன்னையே பாதுகாத்துக் கொள்தல், கூடவே அரணாக நிற்கும் சரியான ஆண்துணை பற்றிய நிகழ்வுகளுடன் இப்படம் நகரும்.

சமூகத்தில் நிகழும் குற்றங்களில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளாதவர்கள் வன்முறைக்கு இரையாகிறார்கள். வல்லூறுகளுக்கு மத்தியில் வாழ்தல் சாதாரண காரியமல்ல. அதையும் தாண்டி வாழும் பலம் முக்கிய தேவை. இதை வேறுகோணத்தில் பார்க்கும், பேசும் படமாக உருவாகியுள்ளது ‘வேம்பு’.

சமூகம் சார்ந்த பலமான கருத்தை முன்வைத்த இப்படம், தற்போது அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருதுக்கான பிரிவில் போட்டியிட்டது.

அதில் சிறந்த நடிகைக்கான விருது ஷீலாவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணன்-க்கும் வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.