சமூக வலைத்தளங்களை ஆட்டிப் படைத்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’
கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகி வரும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் டீஸர் சமூக வலைத்தளங்களில் நேற்று மாலை முதல் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இளமை ததும்பும் இந்த கூட்டணி அனுபவசாலிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டீஸைரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் நடிகர் சரத்குமார் முன்னிலையில் நேற்று மாலை வெளியிட்டார்.
“எனது முதல் கதையை தாணு சாருக்குத் தான் சொன்னேன் இன்று எனது முதல் படத்தின் டீஸரையும் அவரே வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சிக்கு கூடுதலாய் சரத்குமார் சாரும் எங்களை வாழ்த்தினார். தாணு சார் போல் பாராட்டுவதற்கு ஆளே இல்லை. இவ்வகையில் ஒரு டீஸர் வெளியிடுவது இதுவே முதல் முறை என அவர்கள் கூறக் கேட்டதும் பெருமகிழ்ச்சியாய் இருந்தது.
‘விர்ஜின் பசங்க சாபம் உங்கள சும்மா விடாதுடி’ வசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த டீஸர் படத்திற்க்கான நல்ல ஒரு தளமாக அமைந்துள்ளது. என்றார் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆதிக் ரவிசந்திரன்.