மீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா!
தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் முறிவுக்குப் பின் தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்ய தயாரானார் நடிகை த்ரிஷா.
என்ன காரணத்தினாலோ நிச்சயதார்த்தத்தோடு அந்த திருமணம் நின்று போனது. பின்னர் வழக்கம் போல படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தார்.
வயது ஏறிக்கொண்டே போவதால் த்ரிஷாவின் திருமணம் எப்போது என்கிற கேள்வி அவருடைய ரசிகர்களுக்கே இருக்கிறது.
அண்மையில் வெளியான 96 திரைப்படம் த்ரிஷாவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்திருக்கிற நிலையில் ”சிங்கிள் பட் டேக்கன்” என்று அரசல் புரசலாக தனது காதல் ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.
த்ரிஷா கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, பரமபத விளையாட்டு, ராங்கி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.