த்ரிஷாவின் கனவை நிறைவேற்றிய கார்த்திக் சுப்புராஜ்

Get real time updates directly on you device, subscribe now.

ஜினியுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்பது நடிகை த்ரிஷாவின் நீண்டநாள் கனவு. சினிமாவுக்குள் வந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் அவருடைய இந்த கனவு நிறைவேறாமல் இருந்தது.

இத்தனை வருடங்களில் கமல், விஜய், அஜித், விக்ரம் என தமிழில் உள்ள முன்னணி நடிகர்கள் அத்தனை பேர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர், ரஜினியுடன் மட்டும் ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்கவில்லை. இதுகுறித்து அடிக்கடி ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடித்து விட வேண்டும் என்று ஆசை. அது என் வாழ்நாள் கனவு அது மட்டும் இன்னும் நிறைவேறவில்லை என்று நிருபர்களை சந்திக்கும் போது கூறுவார்.

அவருடைய அந்த வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Related Posts
1 of 79

காலா படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதி முதன் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் பாபி சிம்ஹா, யோகி பாபு, மேகா ஆகாஷ் , சனந்த் ரெட்டி ஆகியோரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் சிம்ரன் இணைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தற்போது இப்படத்தில் நடிகை த்ரிஷாவும் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஜினி ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற த்ரிஷாவின் நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது.