த்ரிஷாவின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்!

30-வயதை தாண்டி விட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் ‘லேசா லேசா’வில் எப்படி இருந்தாரோ அப்படியே அதே அழகுடன் இருக்கிறார். அதோடு அவரைத் தேடி வரும் பட வாய்ப்புகளுக்கும் குறைச்சல் இல்லை. விஜய், அஜித், சூர்யா ஆகியோரைத் தவிர்த்து சமீபகாலமாக இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் த்ரிஷா.
அப்படித்தான் இப்போது ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் படத்தைத் தொடர்ந்து தனுஷின் புதுப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
துரை செந்தில்குமார் இயக்கப் போகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் ஆரம்பமாக இருக்கிறது.
இதில் அண்ணன் – தம்பி என இரட்டை கேரக்டர்களில் நடிக்கிறார் தனுஷ். அதில் அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் த்ரிஷா. த்ரிஷாவை கமிட் செய்வதற்கு முன்பு இதே கேரக்டரில் நடிக்க லட்சுமிமேனனையும், நித்யாமேனனையும் கேட்டுப்பார்த்தார் தனுஷ், அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் த்ரிஷாவை டிக் செய்து விட்டார்கள்.
தனுஷ் உடன் த்ரிஷா ஜோடி சேரும் முதல்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.