கடவுளிடம் வரம் கேட்கும் இசையமைப்பாளர்!
மிகவும் வித்தியாசமான கதை என்பதாலும், மிகச் சிறந்த முறையில் படமாக்கப்பட்ட விதத்தாலும் டீசர் வெளியான நாள் முதல் எல்லோருடையப் பாராட்டையும் பெற்று வருகிறது ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் டீசர்.
டீசரைப் போலவே பாடல்களும் பரவலாக பாராட்டு பெரும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் படக் குழுவினர்.
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இளம் இசை அமைப்பாளர் சிவ சரவணன் பல்வேறு இசை ஆல்பம் தயாரித்தவர் இன்று வெளியான படத்தின் பாடல்களைப் பற்றி இசையமைப்பாளர் சிவ சரவணன் என்ன சொல்கிறார்?
‘இது என் வாழ்வில் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளை, எனக்கு ஏழு வயது ஆகும் போது இருந்தே எதிர்நோக்கி வருகிறேன்.
‘உனக்கென வேணும் சொல்லு ‘ படத்தின் இயக்குனர் இந்த படத்தில் ஒவ்வொருப் பாடலும் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும், அதிலும் பிண்ணனி இசைதான் படத்துக்கு உயிர் நாடியாகும் என்றார். பின்னணி இசைக்கு பெயர் போன இளையராஜாவை கடவுளாக பூசிப்பவன் நான், சவாலை ஏற்றுக் கொண்டேன்.
இப்பொழுது படம் பார்த்தவர்கள் பாராட்டும் போது நான் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போகிறேன். இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் என்னிடம் மட்டுமல்ல படத்தின் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையரிடம் இருந்து மிகச் சிறந்த முறையில் திறமைகளை வெளி கொண்டு வர செய்து உள்ளார்.
அடுத்த மாதம் 17ஆம் தேதி ‘உனக்கென்ன வேண்டும் சொல்லு உலகெங்கும் வெளி வர உள்ளது. இந்த நிமிடத்தில் கடவுள் என்னிடம் வந்து ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்றால் நான் கேட்பது என் பாடல்கள் ஹிட்டாக வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்’ என்றார் சிவ சரவணன்.