சக்க போடு போடும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’! – இசையமைப்பாளர் அம்ரீஷ் மகிழ்ச்சி

Get real time updates directly on you device, subscribe now.

க்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘சார்லி சாப்ளின் 2’.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வரும் இப்படத்தில் சின்னத்திரை புகழ் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி பாடி புகழ்பெற்ற ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கிறது.

அம்ரீஷ் இசையமைத்த இந்த பாடல் யு-டியூப்பில் சக்கை போடு போட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உள்ளிட்ட படக்குழுவினர்.

அப்போது தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது, ”இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அந்தப் பாடலை ‘சார்லி சாப்ளின் 2’ படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம்.” என்றார்.

படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, ”அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும்” என்றார்.

Related Posts
1 of 25

பின்னர் பேசிய இசையமைப்பாளர் அம்ரீஷ், ”இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா , இயக்குனர் ஷக்தி சிதம்பரம் , பிரபுதேவா ஆகியோருக்கும் இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு விதவிதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் மூலம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலமாகவும், பிரபுதேவா சாரின் சார்லி சாப்ளின் 2 மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது.

மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே. அடுத்து ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இன்னும் 4 பாடல்கள் உள்ளது. அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.” என்றார்.

‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி என்றார். சந்திப்பில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜனும் கலந்து கொண்டார்.