விஜய்க்கு ஸ்கெட்ச் போடும் ‘வாலு’ இயக்குநர்!
‘புலி’ படத்தைத் தொடர்ந்து விஜய் அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படம் முடிந்த பிறகு விஜய் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பதற்கு இன்னும் முழுமையான பதில் கிடைத்த பாடில்லை.
இதற்கிடையே ‘வாலு’ ரிலீஸ் விவகாரத்தில் எல்லோரும் சிம்புவை கை விட்ட நிலையில், விஜய் தான் கோடிக்கணக்கில் பணத்தை கடனாக வாங்கிக் கொடுத்து ரிலீசுக்கு பக்கபலமாக இருந்து உதவினார்.
இதனால் சிம்புவும், டி.ஆரும் போகிற இடங்களில் எல்லாம் விஜய் பெருமை பேசியபடி இருக்க, இன்னொரு பக்கம் அப்படத்தின் இயக்குநர் விஜய் சந்தரும் தன் பங்குக்கு விஜய்யை புகழ்ந்து தள்ளுகிறார். அதோடு என்கிட்ட விஜய் சாருக்கு மேட்ச்சா ஒரு ஸ்டோரி இருக்குஅவர் மட்டும் கேட்டுட்டு ஓ.கேன்னா நாளைக்கே ஷூட்டிங் கெளம்பிடலாம் என்கிறாராம்.
கொஞ்சம் மனசு வையுங்களேன் தலைவா…