‘தல – 56’ படத்தின் ஒரிஜினல் டைட்டில்? : அஜித் ரசிகர்களுக்கு சுதந்திர தின ட்ரீட்!
இந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தை அஜித் ரசிகர்கள் உண்மையிலேயே கொண்டாடித் தீர்பார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்.
அஜித் படங்களின் சமீபகால படங்கள் எல்லாமே டைட்டில் வைக்கப்படாமலேயே படப்பிடிப்பை முடித்து விடுகிறார்கள்.
போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்து ஆடியோ ரிலீசின் போதுதான் டைட்டிலை அறிவிக்கும் வழக்கத்தை கையாண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் தல – 56 படத்தின் ( இப்படித்தான் டைட்டில் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க அஜித் ரசிகர்கள்!) டைட்டிலை இந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி முறைப்படி அறிவிக்க இருக்கிறார்கள்.
அஜித்- படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இருவருமே தீவிர சாய்பாபா பக்தர்கள். சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை உகந்த நாள் என்பதால் செண்டிமெண்ட்டாக 13-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதாவது 14 ஆம் தேதி ஆரம்பிக்கும் நொடியில் டைட்டிலை முறைப்படி அறிவிக்கப் போகிறார்களாம்.
ஆகவே இந்த சுதந்திர தினம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்ட தினமாக இருக்கப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.