அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள ‘வதந்தி’!

Get real time updates directly on you device, subscribe now.

இந்த சீரிஸில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளத்தில் அவரது முதல் சீரிஸ் இது. மொத்தம் 8 எபிஸோட்கள் கொண்டுள்ள இந்த சீரிஸை உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார் ஆண்ட்ரூ லூயிஸ். இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் லைலா, எம்.நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் குமரன் தங்கராஜனும் நடிக்கிறார். தமிழகத்தில் குமரன் தங்கராஜன் நன்கு பரிச்சியமான நடிகர்தான். அவரை ‘வதந்தி’ ட்ரெய்லரில் பார்த்ததில் இருந்தே ரசிகர்கள் இந்த கதாபாத்திரம் சீரிஸில் எப்படி பயணிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Posts
1 of 2

குமரனை இதற்கு முன்னர் டிவி ஷோக்கள், திரைப்படங்களில் ரசிகர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பாத்திருக்கின்றனர். ஆனால் ‘வதந்தி’ குமரனை முற்றிலும் வித்தியாசமாக முன்னிறுத்துகிறது. ட்ரெய்லரிலேயே குமரனுக்கு அமோக வரவேற்பு இருப்பதால் சீரிஸ் வெளியான பின்னர் அவரது திறமை இன்னும் அதிகமாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 240 நாடுகளில் எல்லைகள் கடந்து பேசப்படும் என்று கணிக்கப்படுகிறது.