ஆபத்தில் பெண்கள் அழைக்கலாம் – வரலட்சுமி சரத்குமார்
இந்த கொரோனா லாக் டவுன் பீரியடில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க நேரம் இன்றி அரசு எந்திரம் கொரோனா தடுப்பு மற்றும் அழிப்புப் பணிகளில் மூழ்கி இருக்கும் நேரத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் சேவ் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இந்த இக்கட்டானத் தருணத்தில் பெண்கள் மீது நடத்தப்பட்டு வரும் வன்முறைகளை தவிர்க்க நாம் அனைவரும் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்திய அளவில் இது போன்ற பெண்களுக்கு உதவ “1800 102 7282” போன்ற உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது போன்ற வன்முறை பாதிப்புக்கு ஆளான பெண்கள் வசதி படைத்தப் பெண்களாக இருக்கலாம். பெரிய தொழில் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். இப்படி யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த போன் நம்பர்களை பிறர் அறியா வண்ணம் கொடுத்து உதவுங்கள்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.