‘வீட்டுக்காரர் அடிச்சா திருப்பி அடிங்க..’ – இளம் பெண்களை உசுப்பி விட்ட வரலட்சுமி!

Get real time updates directly on you device, subscribe now.

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தனது ‘சேவ் சக்தி’ அமைப்பு சார்பில் மகளிர் தின விழாவை நடத்தினார் நடிகை வரலட்சுமி.

விழாவில் பேசிய வரலட்சுமி “எதிர்கால சமுதாயத்திற்கு நாம் நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டும். முக்கியமாக வருங்கால தலைமுறையினருக்கு பெண்களை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.

Related Posts
1 of 3

ஒரு வீட்டில் கணவன் தன்னுடைய மனைவியை அடித்தால், மனைவியும் கணவனை திருப்பி அடிக்க வேண்டும். அதற்காகத் தான் நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம். எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பிரச்சனைகள் இருக்கிறது. சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.” என்று அங்கு வந்திருந்த இளம் பெண்களை உசுப்பி விட்டார். வரலட்சுமியின் இந்தப் பேச்சைக் கேட்டதும் பல பெண்கள் அதிர்ச்சியடைந்தார்கள். சிலர் சிரித்துக் கொண்டே கை தட்டினார்கள்.

தொடர்ந்து பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை வரலட்சுமி, அவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து அவர் உணவு அருந்தினார்.