ஹைதராபாத்தில் நடைபெற்ற’வீரதீர சூரன் பார்ட் 2 ‘ பட விழா!

Get real time updates directly on you device, subscribe now.

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரதீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பட வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Related Posts
1 of 10

எதிர்வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘வீரதீர சூரன் – பார்ட் 2’ வெளியாகிறது . இந்த திரைப்படத்தினை ரசிகர்களிடம் சென்றடைய செய்யும் வகையில் படக் குழுவினர் சென்னை- ஹைதராபாத்- பெங்களூரூ- திருவனந்தபுரம் – மதுரை – திருச்சி – கோயம்புத்தூர் – உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக நேற்று ஹைதராபாத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சீயான் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர்/ விநியோகஸ்தர் என் வி ஆர் சினிமாஸ் என். வி. பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.