லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் ஹைவோல்டேஜ் படம் ‘நெடுநல்வாடை’

Get real time updates directly on you device, subscribe now.

”படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆன பிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்து விட்டோம்” என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வ கண்ணன்.

உடன் படித்த 50 நண்பர்களின் பண முதலீட்டில் பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரான இப்படம் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. தற்போது எல்லாப் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்ந்து அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி.மதன் இப்படத்தை ரிலீஸ் உதவி புரிந்து வருகிறார்.

Related Posts
1 of 136

பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் செல்வ கண்ணன் பேசியதாவது, ”இந்தப் படம் எத்தனையோ முறை டிராப் ஆக வேண்டியது. ஆனால் நடந்த உண்மைகள் எதையும் மறைக்காமல் பிரச்சினைகள் அத்தனையையும் நண்பர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிக் கொண்டே இருந்தேன்.

அவர்களுக்கு பிராக்டிக்கலான சினிமா குறித்து எதுவுமே தெரியாதென்றாலும் நான் பொய் சொல்லவில்லை என்ற ஒரே காரணத்துக்காக தொடர்ந்து உதவி செய்து படத்தை முடிக்க உதவினார்கள். நல்ல படங்களை ரசிகர்கள் ஒருநாளும் கைவிட்டதில்லை என்ற நம்பிக்கையில் மிகவும் தரமான ஒரு படத்தை நல்ல டெக்னீஷியன்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறேன். இந்தப்படம் லோ பட்ஜெட் டெக்னீஷியன்களின் உழைப்பில் தயாரான ஹைவோல்டேஜ் படம் என்றார்.