தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை-கமல்ஹாசன்!

Get real time updates directly on you device, subscribe now.

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ், தனது தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,  AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்துள்ள “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இசை வெளியீடு, ரசிகர்களின் முன்னிலையில் மிகப்பிரமாண்டமான அரங்கில் கோலகலமாக நடைபெற்றது. திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது…

Related Posts
1 of 2

‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள் அது எனக்கு மிகப்பிடிக்கும், அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ அது போல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம் தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ் படம் தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ் படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி.   படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டுகொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி வாய்ப்புகளை நான் மிஸ் செய்வதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.  

#VendhuThanindhathuKaadu  #வெந்து தணிந்தது காடு