பெருமை மிகு விருதை வென்ற வெற்றிமாறனின் ‘விசாரணை’
இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் 72 வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி “மனித உரிமைகள் பற்றிய சினிமா” பிரிவில் பெருமை மிகு விருதை வென்றுள்ளது.
படத்தில் தங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி ஆகியோரும் வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.
வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல், மூனார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தனுஷின் வுண்டர் பார் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இனைந்து தயாரித்துள்ள ‘விசாரணை’ திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ள லைகா நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.