என்னாச்சு ‘விஜய் 59’ டைட்டில்? : இன்னும் குழப்பத்திலேயே இருக்காராம் அட்லி!

டைட்டில் வைக்காமலேயே ஆரம்பிக்கப்பட்ட விஜய்யின் 59-வது படம் கிட்டத்தட்ட முழுப்படப்பிடிப்பையும் நெருங்கி விட்டது.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையிலும் கூட படத்துக்கு எந்த டைட்டிலை வைப்பது என்கிற குழப்பத்திலேயே தான் இருக்கிறார் இயக்குநர் அட்லி.
படத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக வருவதால் பேசாமல் ‘காக்கி’ என்ற டைட்டிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது ‘வாய்மை’ படத்தின் இயக்குநர் செந்தில்குமாரிடம் இருக்கிறதாம்.
மேற்படி அந்த டைட்டிலை வாங்க பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்தாலும் மறுபக்கம் ‘வெற்றி’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கலாமா என்கிற யோசனையும் இருக்கிறதாம்.
எது முடிவாகும் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் வரும்போது தான் தெரியவரும்.
அதுவரை விஜய் ரசிகர்கள் ‘விஜய் 59’ என்றே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.