தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ !

Get real time updates directly on you device, subscribe now.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படம் சென்னையில் நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள பூஜையுடன் இனிதே துவங்கியது. பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

Related Posts
1 of 14

#CaptainMiller #கேப்டன் மில்லர்