விஜய் 61 இயக்குநர் யார்? : உறுதி செய்தார் விஜய்
விஜய்யின் 60-வது படமான ‘பைரவா’ ரிலீசுக்கு தயாராகி விட்டது.
பரபர தொழில்நுட்ப வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. 2017 ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸ் என்று தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்து விட்டதால் பொங்கல் தினத்தை கொண்டாடித் தீர்க்க தயாராக இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு ஒரு படம் முடியவும் அடுத்து அவருடன் எந்த இயக்குநர் இணையப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு உடனே கிளம்பி விடும்.
அப்படித்தான் பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, கார்த்திக் சுப்புராஜ், ஹரி, ரஞ்சித் என பிரபல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டது.
இதில் விஜய்யுடன் இணையவில்லை என்று அறிவித்த இயக்குநர் ரஞ்சித் அடுத்த படமும் சூப்பர் ஸ்டார் உடன் தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.
மிஞ்சியிருக்கும் இயக்குநர்களில் யார் என்கிற கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்காமல் இருந்தது. இப்போது உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆமாம், தெறி படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணையப் போகிறாராம் டைரக்டர் அட்லீ.
தேனாண்டாள் பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்போகிறதாம். இதில் விஜய்க்கு ஜோடி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வரும் என்று தெரிகிறது.