அசிங்கப்பட்டார் அமலாபால்! : ஆறுதல் சொல்லத்தான் ஆள் இல்லே!

விவகாரத்து விவகாரமே இன்னும் முடிவுக்கு வரவில்லை, அதற்குள் இன்னொரு விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் அமலாபால்.
காதல் கணவர் ஏ.எல். விஜய்யை பிரிந்து வாழும் நடிகை அமலாபால் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்துள்ளார். இருவருமே தற்போது அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.
அந்தப் பிரிவு தான் இப்போது அமலாபாலை அசிங்கப்பட வைத்திருக்கிறது சமூக வலைத் தளங்களில்!
புதிதாக உதித்த செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் போட்டிகளில் விளையாடும் சென்னை ராக்கர்ஸ் அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக கமிட்டானார் அமலாபால்.
இந்த சென்னை அணியின் அறிமுக விழாவுக்கு வந்த அமலாபால் கொஞ்சம் டீஸண்ட்டான உடைகளில் வந்திருந்தால் பரவாயில்லை. ஒரு கவர்ச்சி நடிகை லெவலுக்கு குட்டியான கவுன் போட்டு வந்து அதிர்ச்சி கொடுத்தார்.
அமலாபால் வந்ததும் குழுமிய புகைப்படக்காரர்கள் விதவிதமாக ஆங்கிள்களில் போட்டோக்களை எடுத்துத் தள்ள அவைகள் எல்லாமே சமூகவலைத் தளங்களில் வைரலாகி விட்டது.
புகைப்படத்தைப் பார்த்தை அம்பிஷியஸ் என்ற நக்கல் பிடித்த ரசிகர் விவாகரத்தான பெண்கள் எப்போதுமே ஹாட் மற்றும் குறும்பாகத்தான் இருக்கிறார்கள் அமலாபால் விவகாரத்தை கேலி செய்யும் விதமாக கமெண்ட் போட்டார்.
அவரின் கமெண்ட்டைப் பார்த்து அதிர்ந்து போன அமலாபால் ஏ பையா.. உங்களின் நோக்கம் தவறான பாதையில் உள்ளது. தயவு செய்து பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கொடுத்தார்.
அவருக்கு ஆதரவாக பலர் வந்தாலும் அதே அளவுக்கு அவருடைய ஆடை குறித்தான விமர்சனங்களும் சேர்ந்தே வந்தன.
அசிங்கப்பட்ட அமலாபாலுக்கு ஆறுதல் சொல்லத்தான் இப்போ ஆள் இல்லே…