விஜய் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நீக்கம்! : ஏ.ஆர்.ரஹ்மானை புக் செய்தார் அட்லி
”ஒரு நாயகனாக என்னுடைய படங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதை தவிர்த்து வருகிறேன்.”
இப்படிச் சொல்பவர் ஹீரோவாக தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
ஒரு தொழில்முறைக் கலைஞனின் எண்ணன் இப்படித்தான் இருக்கும். இருக்கவும் வேண்டும்.
ஆனால் ஜி.வி. பிரகாஷ் விஷயத்தில் இது வேறு மாதிரியாக இருந்து வருகிறது. அதுதான் சொதப்பலாகி இப்போது அவருடைய நெருங்கிய கூட்டாளிகளே அவரை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது.
மேட்டர் இதுதான்!
ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகும் தன் படங்களுக்கும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைப்பதை விடாமல் செய்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஆனால் முன்பு போல அவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் லயிப்பைக் கொடுக்கவில்லை. மாறாக பாடல்கள் மீதான விமர்சனங்கள் தான் அதிகரித்து வருகிறது.
ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் இசையமைப்பு பணி என்று வேலைப்பளு அதிகம் என்பதாலோ என்னவோ ஜி.வியின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறைய ஆரம்பித்திருக்கிறது.
இதை அவர் உணர்ந்தாரோ இல்லையோ அவரை தங்களுடைய படங்களில் இசையமைப்பாளராக கமிட் செய்யும் இயக்குநர்கள் உணர்ந்து விட்டார்கள்.
அந்த வகையில் விஜய் 61 படத்தை இயக்கத் தயாராகி வரும் இயக்குநர் அட்லி அப்படத்தில் ஜி.வி பிரகாஷை விட்டு விட்டு ஏ.ஆர்.ரஹ்மானை கமிட் செய்து விட்டாராம்.
தன்னுடைய எல்லாப் படங்களிலும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த வந்த அட்லியே இப்படி ஒரு முடிவை எடுத்தது சக இயக்குநர்கள் வட்டத்திலும் யோசிக்க வைத்திருக்கிறது.
பேசாம ரெண்டுல ஒண்ணைத் தொட்டுட்டுப் போங்க ஜி.வி…!!