உலக அளவில் சிறந்த நடிகரான விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

விஜய் நடிப்பில் சென்ற 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி ரிலீசான படம் ‘மெர்சல்’.

அட்லீ இயக்கியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றும் வசூலிலும் சாதனை படைத்தது. குறிப்பாக இந்தப்படத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்களை கடுமையாக சாடி வைக்கப்பட்டிருந்த காட்சிகளுக்கு தமிழக பி.ஜே.பியினர் காட்டிய எதிர்வினையால் வசூல் 250 கோடியை தொட்டது.

மேலும் இப்படத்தில் மூன்று விதமான கேரக்டர்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த விஜய்யின் பெயர் சர்வதேச அளவில் வழங்கப்படும் ஐஏஆர்ஏ விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Related Posts
1 of 76

2014 -ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்ததற்காக 2018 -ம் ஆண்டுக்கான ஐஏஆர்எ விருது பரிந்துரை பட்டியல்கள் கடந்த ஜூலை மாதம் 21 -ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற நடிகர்களுக்கு ரசிகர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இந்நிலையில் ஐஏஆர்ஏ விருதுப் பட்டியல்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. அதில் ரசிகர்களின் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதை மெர்சல் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் விஜய்க்கு கிடைத்துள்ள கவுரவத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு விஜய்க்கு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.