எலெக்‌ஷன் எதிரொலி : விஜய்யுடன் நேரடியாக மோதும் சூர்யா!

Get real time updates directly on you device, subscribe now.

vijay

வருகிற மே மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை என்றாலும் தேர்தல் நடப்பது உறுதி என்பதால் அதற்கு முன்பாக விஜய்- சூர்யா படங்கள் நேரடியாக மோதுகின்றனவாம்.

தமிழில் சின்ன சின்ன பட்ஜெட்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள் தயாராகி ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றன. போட்டி படங்களின் எண்ணிக்கை, தியேட்டர்களின் எண்ணிக்கை ஆகிய பிரச்சனைகளால் இந்தப் படங்கள் எல்லாம் எப்போது ரிலீசாகும் என்பதே தெரியாமல் இருக்கின்றன.

இந்த நிலையில் மேமாதம் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம் என்பதால் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ரேஸில் முந்த ஆரம்பித்திருக்கின்றன.

விஜய் நடித்த ‘தெறி’ சூர்யா நடித்த ’24’ இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து தொழில்நுட்ப வேலைகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

Related Posts
1 of 109

தேர்தல் முடிந்து மேமாதத்தில் ரஜினியின் ‘கபாலி’ படம் ரிலீசாகும் என்பதால் அதற்கு முன்பாக அதாவது தேர்தலுக்கு முன்பாகவே ஏப்ரல் மாதத்தில் தெறி- 24 ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோத இருக்கின்றன.

வழக்கமான விஜய் – அஜித் படங்கள் தான் ஒவ்வொரு பண்டிகைக்கும் மோதும். இந்த முறை அஜித் இடத்தை சூர்யா பிடித்துக் கொண்டார்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ரிலீசான ‘மாஸ்’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் ’24’ படத்தின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் சூர்யா.

சமந்தா, நித்யா மேனன் நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார். பக்காவான த்ரில்லர் படமாக தயாராகியிருக்கிறது 24.