‘ஆமாம் நான் ஜோசப் விஜய் தான்’ : ஹெச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

vijay

‘மெர்சல்’ சர்ச்சையில் தமிழக பி.ஜே.பி தலைவர்கள் தொடர்ந்து எதிர்க்கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக பி.ஜே.பியின் தேசியச் செயலாளரான ஹரிஹரி ராஜா சர்மா என்கிற ஹெச். ராஜா விஜய் ஒரு கிறிஸ்துவர் என்றும் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று மதத்தைக் குறிப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. கடுமையாக சாடவும் செய்தனர்.

ஆனாலும் விமர்சிப்பதை விடாத ஹெச்.ராஜா விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையையும் அவரது ட்விட்டரில் வெளியிட்டு கூடவே விஜய் குமுதத்திற்கு எழுதிய நன்றி கடிதத்தையும் வெளியிட்டிருந்தார்.

அவருடைய இந்த தொடர்ச்சியான செயல்களுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றினாலும் விஜய் மட்டும் அமைதியாகவே இருந்தார்.

Related Posts
1 of 79

ஆனால் இன்று ஹரிஹரி ராஜா சர்மாக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று வெளியிட்ட நன்றிக் கடிதத்தில் நாசுக்காக ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

வழக்கமாக ஆக்டர் விஜய் என்ற பெயரில் மீடியாக்களுக்கு அறிக்கை அனுப்பும் விஜய் இந்த முறை மெர்சல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை ஜோசப் விஜய் என்று பெயர் பொறிக்கப்பட்ட தனது லட்டர் பேடில் அனுப்பியிருக்கிறார்.

இன்று வரை எல்லாவற்றுக்கும் மவுனம் காத்த விஜய், இன்று நாசுக்காக… அதே நேரத்தில் அழுத்தமாக ஒரு விஷயத்தை பதிய வைத்திருக்கிறார். அதில் ஒளிந்திருக்கும் ‘ஆமாண்டா… நான் கிறிஸ்துவன்தான்’ என்கிற பதிலை எத்தனை பேர் புரிந்து கொள்வார்களோ? நிச்சயம் எச் ராஜா கோஷ்டிகளுக்கு புரியும்.

மேலும் அந்த லட்டர் பேட்டில் ‘ஜீசஸ் சேவ்ஸ்..’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மெர்சல் படத்தை மாபெரும் வெற்றிபெறச் செய்த தனது ரசிகர்களுக்கு விஜய் எழுதிய கடிதம் கீழே :

 

vijay-letter