விக்ரம் படத்தால் நஷ்டம் ? : நொந்து போன தயாரிப்பாளருக்கு உதவ வந்த விஜய்!
விஜய் படங்கள் என்றாலே தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி கிடைத்து விடும்.
வெற்றியா, தோல்வியா என்கிற விவாதத்தை சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டாலும், அவரை நம்பி போட்ட முதலீட்டுக்கு மட்டும் எந்த பங்கமும் வராமல் வசூலைக் கொண்டு வந்து விடும். ஒருவேளை முதலுக்கே மோசமாகி பெருத்த நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களாக இருந்தால் அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் விஜய் உதவி செய்வதும் வாடிக்கையான ஒன்று.
அப்படித்தான் தமிழ்சினிமாவில் பிரம்மாண்டத் தயாரிப்பாளர்களில் ஒருவராக சொல்லப்படும் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ய முன் வந்திருக்கிறாராம் விஜய்.
விஜய் நடிப்பில் ரிலீசான ‘வேலாயுதம்’ படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன், மோகன் ராஜா இயக்கத்தில் ரிலீசான அந்தப்படம் சுமாராக வசூல் தந்தாலும், அதன் பிறகு அவர் தயாரித்த பல படங்கள் படுதோல்வியை சந்தித்தது.
குறிப்பாக விக்ரமை வைத்து தயாரித்த ‘ஐ’ படத்தால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த தனது சொத்துக்களை ஏலத்தில் விடுகிற அளவுக்கு நிலைமை பரிதாபகரமாகிப் போனது.
இதனால் நொந்து போய் சமீபகாலமாக படத்தயாரிப்பிலிருந்து கொஞ்சம் ஒதுங்கிருக்கும் அவருக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுத்து அவரை கை தூக்கி விட சம்மதம் சொல்லியிருக்கிறாராம் விஜய்.
தற்போது கஷ்டத்தில் இருக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்தால், இதுவே அவர் செய்யும் பேருதவியாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
நல்லதே நடக்கட்டும்!