நாக சைதன்யாவுடன் திருமணம் நடக்குமா? : சிரித்து மழுப்பும் சமந்தா!
இந்தக் காதல் பொல்லாதது என்று ரசிகர்களே உச் கொட்டுகிற அளவுக்கு சமந்தா – நாக சைதன்யா காதல் விவகாரம் ஒவ்வொரு கட்டத்திலும் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கொண்டதாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தான் வருகிற செப்டம்பர் மாதம் 23-ம் தேதி நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று மீடியாக்களில் செய்திகள் பரவ ஆரம்பித்தது.
இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த சமந்தா வந்த செய்திக்கு கண்டனம் தெரிவித்த அதே சமயத்தில் இந்த திருமணம் உண்மை தான் என்பது போலவே அவரது அடுத்தடுத்த நடவடிக்கைகளும் அமைந்தன. குறிப்பாக தனுஷுடன் ஜோடி சேர வந்த வாய்ப்பான வட சென்னை படத்திலிருந்து தானாக விலகினார்.
அதோடு எந்தக் கேள்வி கேட்டாலும் யோசிக்காமல் பதில் சொல்லும் சமந்தா நாக சைதன்யாவைப் பற்றியும், அவருடனான காதலைப்பற்றியும் கேட்டால் மட்டும் ஒரே ஒரு புன்னகையோடு சைலண்ட் ஆகி விடுகிறாராம்.
என்னமோ இருக்குது! அது உண்மையாவும் இருக்கும் போல!!