குழந்தைகளுக்காக இந்த மாற்றத்தைக் கூட செய்யலேன்னா எப்படி? – அதுதான் விஜய்
முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் ஆரம்ப காலங்களில் சென்னை சாலிகிராமத்தில் தான் பெற்றோருடன் வசித்து வந்தார்.
சங்கீதாவை திருமணம் செய்த பிறகு தனது குடும்பத்தினருடன் சென்னை நீலாங்கரைக்கு போய் விட்டார். பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து வந்த விஜய் தற்போது தனது குழந்தைகளுக்காக நீலாங்கரை வீட்டை காலி செய்துள்ளார்.
அதற்கு காரணம் விஜய் ரசிகர்களின் அன்புத் தொல்லை தானாம்!
நீலாங்கரை வீட்டுக்கு அடிக்கடி ரசிகர்கள் படையெடுப்பதால் அந்த வீட்டை கொஞ்சம் மாற்றம் செய்து காம்பவுண்ட் சுவரை பெரிதாக எழுப்பி கட்டிப் பார்த்தார். அதற்குப் பிறகும் அங்கு ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
இதற்கும் ரசிகர்களை அவ்வப்போது நேரில் சந்தித்து, அவர்களிடம் பேசியும் வருகிறவர் தான் விஜய். அப்படியிருந்தும் அலுவலகத்துக்கு வராமல் ரசிகர்கள் நேரடியாக வீட்டுக்கே படையெடுப்பது அவரது மகன், மகள் ஆகியோரின் படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட விஷயங்களில் தொந்தரவாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பொருட்டே நீலாங்கரை வீட்டை காலி செய்த விஜய் தற்போது பனையூரில் ஒரு புதிய வீட்டில் குடும்பத்தொடு குடியேறியிருக்கிறார்.
இனி ரசிகர்களின் அன்புத் தொல்லை மகனுக்கும், மகளுக்கும் இருக்காது என்பதால் நிம்மதியாக இருக்கிறார் விஜய்.
அதானே எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல?